About

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிறந்த எனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் கொளத்துப்பாளையம் என்னும் ஊர். என்னை ஈன்றெடுத்த தாய் தகப்பன் அண்ணாதுரை சுமதி ஆவார்கள்.  மழலையர் கல்வி முதல் மேல்நிலை பள்ளி வரை ஆங்கில கல்வியில் தான் படிக்க வைத்தார்கள். நான்காம் வகுப்பு வரை உள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். பின்பு ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தாராபுரம் சென்று படித்து வந்தேன். எந்த இடையூறும் இல்லாமல் சராசரி மாணவனாக கற்று வந்தேன்.
பின்பு இளநிலை பொறியியல் படிப்பின் மேல் ஆர்வம் கொண்டு, 12 ஆம் வகுப்பு 2008 இல் முடித்தவுடன் நாமக்கல் அருகே கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் துறை எடுத்து 2012 இல் முடித்தேன். அதன் பிறகு முதுநிலை பொறியியல் அதே கணினி அறிவியல் துறை எடுத்து வி.எஸ்.பி பொறியியல் கல்லூரி, கரூர் 2015 ஆம் ஆண்டு முடித்தேன்.
இடையில் ஓராண்டு வேலை தேடி பெங்களூரு சென்று திரும்பினேன். பின்புதான் முதுநிலை பொறியியல் படித்தேன். 2013 இல் திரும்பவும் பெங்களூரு சென்று வேலை தேடும் பணி. ஜூன் மாதத்தில் இரண்டாம் வாரம் அடித்து பிடித்து ஒரு வேலை கிடைத்தது. 15ஆயிரம் சம்பளம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து அந்த இடம் சரிபட்டு வராது என்று கூறி விட்டு விட்டு விலகி வந்து வேறு வேலை தேட ஆரம்பித்தேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டி நிறைய புத்தகம் படிப்பேன். தமிழ் புத்தகம் என்றால் அவ்வளவு பிரியம். படிக்கும் போதும் சரி இப்போதும் சரி விவசாயம் குடும்பம் என்பதால் எப்பொழுதும் விவசாய வேலை செய்வது கடினம் இல்லை. அனைத்து வேலைகளும் செய்வேன்.
B.E படிக்கும் போது அக்காவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் பெங்களூருவில் தான் இருக்கிறார்கள்.
என் அடுத்த இலக்கு எது, அடுத்து என்ன என்பதிலே வாழ்க்கை கழிகிறது.